Politics
“தூக்கத்திலிருந்து வெளியே வாங்க முதலமைச்சர் விஜய்.. மக்கள் கஷ்டப்படுகிறார்கள்” : இ.பரந்தாமன் காட்டம்!
ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே மருத்துவப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். இப்போது எங்கே போனார்? தவெக அரசு ஏமாற்றுப் பேர்வழிகளால் அமைந்தது. எம்.எல்.ஏ-க்களை திருட்டுத்தனமாக வாங்குவது, இடைத்தேர்தல்களால் அரசை தக்கவைப்பது என திருட்டு அரசாக உள்ளது. தவெக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது என்பதே உண்மை.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் இ.பரந்தாமன் இன்று (அக்.14) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் ஒரு மூட்டை அரிசி ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது ரூ.1,800 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது. அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
விலைவாசி உயர்வு குறித்து உணவுத்துறை அமைச்சர் கூறும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. அமைச்சர் வெங்கட்ரமணன் தொகுதியான மயிலாப்பூரில் உள்ள மளிகைக் கடைக்குத் தன்னுடன் வந்து பொருட்களை வாங்கிப் பார்க்கலாம். விலைவாசி உயர்ந்துள்ளதா இல்லையா என்பதை மக்களிடம் நிரூபிக்கலாம் என்றும் சவால் விடுத்தார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரப் பிரச்சினையின்போது, அப்போதைய திமுக அரசு சிறப்பு விநியோகத் திட்டத்தைக் கொண்டு வந்து உளுந்து, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் வழங்கியது. தற்போது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் விஜய் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளாரா? என கேள்வி எழுப்பினார்.
மின் பற்றாக்குறை ஒரு பக்கம் எகிறியுள்ளது. மின்சாரம் ஏன் இல்லை எனக் கேட்டால் காற்று இல்லை, தண்ணீர் இல்லை என காரணம் கூறுகின்றனர். துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் ஓடிவிட்டார். மின் பற்றாக்குறை ஏற்படுவது தெரியுமா? தெரியாதா? அரசு நிர்வாகத்தை நடத்துகிறீர்களா இல்லையா? மக்களுக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறது, பற்றாக்குறை எவ்வளவு, மின்சாரத்தை எப்படி வாங்க வேண்டும் என்பது கூட தவெக அரசுக்கு தெரியாதா?
திமுக-வின் கடந்த ஆட்சிக் காலங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போதும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்திலும் தமிழ்நாட்டிற்கு 5 ஆண்டுகால மின் தேவை என்ன? எவ்வளவு பற்றாக்குறை உள்ளது, அதற்கான உடனடி நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும். நீண்ட காலத் தேவை என்ன? என்பதை ஆராய்ந்து செயல்பட்டோம். ஆனால் அது தவெக ஆட்சியில் இல்லை.
“முதலமைச்சர் விஜய் முதலில் Sleep Mode-ல் இருந்து, Action Mode-க்கு வாருங்கள். தூக்கத்திலிருந்து வெளியே வாருங்கள் முதலமைச்சரே. Cute CM.. Smile CM.. என சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறது. நீங்கள் சிரித்தால் என்ன? சிரிக்கவில்லை என்றால் என்ன? தவெக ஆட்சியில் தமிழ்நாடு மக்கள் வயிறு எரிகிறது. ஏன் இந்த ஆட்சியை தேர்வு செய்தோம் என மக்கள் எல்லாம் அழுகின்றனர்.”
பொதுமக்களின் தேவைகளை பற்றி தவெக கவலை கொள்ளவில்லை. மக்கள் பிரச்சனை ஒரு டிராக்கிலும், தவெக அரசு வேறொரு டிராக்கிலும் ஆபத்தான நிலையை நோக்கிச் செல்கிறது. லாட்டரி அதிபரையும், பிளாக்கில் டிக்கெட் விற்றவரையும் அமைச்சரவையில் வைத்துக்கொண்டு, தவெக அரசு நிர்வாகம் தெரியாமல் சிக்கித் தவிக்கிறது.
ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே மருத்துவப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். இப்போது எங்கே போனார்? தவெக அரசு ஏமாற்றுப் பேர்வழிகளால் அமைந்தது. எம்.எல்.ஏ-க்களை திருட்டுத்தனமாக வாங்குவது, இடைத்தேர்தல்களால் அரசை தக்கவைப்பது என திருட்டு அரசாக உள்ளது. தவெக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது என்பதே உண்மை. குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Also Read
-
10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதிகள், முடிவுகள் வரை! : முழு விவரம் உள்ளே!
-
“CJP-க்கு தி.மு.க துணை நிற்கும்!” : பா.ஜ.க.வைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
யார் திறந்து வைத்தாலும், மெட்ரோ கனவை நிறைவேற்றியது கலைஞரும், தி.மு.க தலைவரும் தான்! - முரசொலி தலையங்கம்!
-
“ஊழல் Deal முடிக்க பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கும் பஞ்ச் டயலாக் CM” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
பாசிச எதிர்ப்புக்கெல்லாம் கூப்பிடாதீர்கள் ; செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா? - தயாநிதிமாறன் MP!