Politics

“தமிழ்நாடு என்ற பெயர் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

சங்கரலிங்கனார் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாடு எனும் பெயருக்காக உயிரையே கொடுத்த உணர்வாளர் சங்கரலிங்கனார் நினைவு நாள்!

வரலாற்றில் பல பெயர்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெயருக்காக உயிரையே இழந்த வரலாறுதான் விருதுநகர் தந்த வீரத்தியாகி சங்கரலிங்கனாருடையது.

தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்தார். இறுதியில் உயிரையே துறந்தார்.

ஆயினும் அன்றைய ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. கழக ஆட்சி அமையும்வரை காலம் கனியவில்லை.

வென்றது கழகம்! வந்தார் அண்ணா! நிறைவேற்றினார் தீர்மானத்தை! தமிழ்நாடு தமிழ்நாடானது!

தமிழ்நாடு பெயர்சூட்டலில் பல பேரின் போராட்டங்கள், தியாகங்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சளைக்காத முயற்சிகள் அடங்கியுள்ளன. ஆனால், இப்போராட்டத்தில் தனது இன்னுயிரையே இழக்கத் துணிந்த சங்கரலிங்கனாரின் தமிழுணர்வுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது! தமிழ்நாடு வாழ்க! என தெரிவித்துள்ளார்.

Also Read: “SIR-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுதலை செய்க!” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!