Politics
அமைதிக்கான நோபல் பரிசு.. நவநீதம் பிள்ளைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
2026-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி நீதியாளர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், 2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நவநீதம் பிள்ளை அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், குரலற்றவர்களின் உரிமைகளுக்காகவும் தமது வாழ்நாளையே அர்ப்பணித்த அவரது நெடிய பயணத்திற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது!
2012-ஆம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர்களின் துயர்மிகுந்த வாழ்வையும், நீதிக்காகவும் கண்ணியமான வாழ்வுக்காகவும் அவர்கள் நடத்திவரும் போராட்டத்தையும் எடுத்துரைத்ததை இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.
நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தொடங்கி, உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பது வரை, துணிச்சலும் கொள்கை உறுதியும் நிறைந்தது அவரது பயணம்!
மனித உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் அவர் ஆற்றிவரும் பணி, வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்! என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
உதயநிதி ஸ்டாலினை சந்தித்த தங்க மங்கை வித்யா ராம்ராஜ்.. கழக அரசின் உதவிகளை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி!
-
“அமைதிக்கான ‘நோபல் பரிசு’ பெறும் நவநீதம் பிள்ளை.. அவரது களப்போராட்டம் போற்றத்தக்கவை!” : உதயநிதி ஸ்டாலின்!
-
“காவிரி நதி நீர்ப் பங்கீடு.. கர்நாடகத்தின் முயற்சியை வேடிக்கை பார்க்கக் கூடாது!” : உதயநிதி ஸ்டாலின்!
-
“இடைத்தேர்தல் முடிவுகள்.. திணிக்கப்பட்ட தேர்தலில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி.. !” : மு.க.ஸ்டாலின்!
-
பட்டியலின மக்களைக் காலில் விழவைத்து அராஜகம் ; சாதிவெறிக்குத் துணை போகும் தவெக அரசு - DMK IT WING கண்டனம்!