Politics
“அமைதிக்கான ‘நோபல் பரிசு’ பெறும் நவநீதம் பிள்ளை.. அவரது களப்போராட்டம் போற்றத்தக்கவை!” : உதயநிதி ஸ்டாலின்!
2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி நீதியாளர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி மற்றும் சர்வதேசச் சட்டத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உலக அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வாகி இருக்கும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திருமிகு.நவநீதம் பிள்ளை அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கும் நிறவெறி, ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுப்பதோடு - களப்போராட்டத்தையும் முன்னெடுத்து வரும் அவரது பணிகள் போற்றத்தக்கவை.
மனிதகுலத்தின் மேன்மைக்காகவும் - அமைதிக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள திருமிகு.நவநீதம் பிள்ளை அவர்களின் பணிகளைப் போற்றுவோம்.
அவருக்கு கிடைக்கவிருக்கும் ‘நோபல் பரிசு’, உலக அமைதிக்காக பாடுபட்டு வரும் ஒவ்வொருவருக்குமான ஊக்கமாக அமையட்டும்! என வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Also Read
-
உதயநிதி ஸ்டாலினை சந்தித்த தங்க மங்கை வித்யா ராம்ராஜ்.. கழக அரசின் உதவிகளை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி!
-
அமைதிக்கான நோபல் பரிசு.. நவநீதம் பிள்ளைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“காவிரி நதி நீர்ப் பங்கீடு.. கர்நாடகத்தின் முயற்சியை வேடிக்கை பார்க்கக் கூடாது!” : உதயநிதி ஸ்டாலின்!
-
“இடைத்தேர்தல் முடிவுகள்.. திணிக்கப்பட்ட தேர்தலில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி.. !” : மு.க.ஸ்டாலின்!
-
பட்டியலின மக்களைக் காலில் விழவைத்து அராஜகம் ; சாதிவெறிக்குத் துணை போகும் தவெக அரசு - DMK IT WING கண்டனம்!