Politics

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!

பிறப்பின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் சாதிய ஒடுக்குமுறையை தகர்த்து, சமூக நீதியை விதைத்த பெருமைக்குரிய தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்தநாளை, இன்று (செப்.17) தமிழ்நாடு முழுவதும் சமூகநீதி நாளாக கொண்டாடி வருகின்றனர்.

இதனையொட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டப் பதிவு பின்வருமாறு,

“தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!

பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.

ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.

பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.

ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!

வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.

“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.

பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!”

Also Read: வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்காரியா கமிஷன் வரலாறு; இதனை விஜய் அறியமாட்டார்! - முரசொலி தலையங்கம் கண்டனம்!