Politics

“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!

தமிழ்நாட்டிற்கு, ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டிய பெருமைக்குரியத் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று (செப்.15) ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், உலகளாவிய தமிழர்களும், அண்ணாவின் பெருமையை பறைசாற்றி வருகின்றனர்.

இதனையொட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களால் நிறுவப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!

கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!

தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் - மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார். வாழ்க அண்ணாவின் புகழ்!”

Also Read: திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!