Politics
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
சென்னை தெற்கு மாவட்டம் - வேளச்சேரி மேற்குப் பகுதி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தினேஷ் - எலிசபத் மிசெல் ஆகியோரின் திருமணம் இன்று (செப்.13) நடைபெற்றது. இத்திருமணத்தை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு பெரிய பிரச்சனையாக உள்ளது. சட்டம், ஒழுங்கு குறித்து சொல்லவே தேவையில்லை.
தவெக ஆட்சியில் அரிசி, பருப்பு விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கிறது. இது குறித்து எல்லாம் முதலமைச்சரிடம் கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், திமுக மீதும், கழகத் தலைவர் மீதும் பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இப்படி ஒரு அநாகரீகமான, டம்மி முதலமைச்சரை நாம் பார்த்தது இல்லை. ஆட்சிக்கு வரும்போது பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டு, கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. நாம் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திற்கும் பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி இந்த அரசு பொய் பரப்பி செயல்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
அடுத்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துவதால், தற்போது இரண்டு தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த தேர்தலில் திமுகவின் வெற்றி, த.வெ.க. ஆட்சியின் வீழ்ச்சிக்கு ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்று கூறினார். இடைத்தேர்தலில் நாம் அனைவரும் சேர்ந்து டம்மி முதலமைச்சருக்கு சரியான பாடம் புகட்டுவோம் என தெரிவித்தார்.
Also Read
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!