Politics
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
இந்திய அளவில் பா.ஜ.க மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு அதிகப்படியான நிதிப்பகிர்வு; தமிழ்நாடு உள்ளிட்ட பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதிக் குறைப்பு என்ற வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாணவர்களின் கல்விக்கு வழங்கும் நிதியிலும் நிலுவை, எளியவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் திட்டங்களுக்கும் நிதி நிலுவை என பா.ஜ.க.வின் அட்டூழியம் நீடித்து வருகிறது.
இதனை அம்பலப்படுத்தும் வகையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்துள்ளது என்ற தகவல், RTI - தகவல் அறியும் சட்டத்தின் வழி வெளிப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு 2023 - 24 நிதியாண்டில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்கிய ரூ.13,395 கோடி நிதி; 2024 - 25 நிதியாண்டில் ரூ.10,744 கோடியாகவும்; 2025 - 26 நிதியாண்டில் ரூ.6,254 கோடியாகவும் குறைந்துள்ளது.
அதாவது, கடந்த மூண்டு ஆண்டுகளில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் நிதியை பாதிக்கும் குறைவாக குறைத்துள்ளது. அதிலும், ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “இருக்கின்ற நூறு நாள் வேலைத்திட்டத்திற்கே நிதி சரியாக வழங்கப்படாதபோது, அதனை 125 நாட்கள் வேலைத்திட்டமாக உயர்த்துகிறோம் என பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் கூசாமல் கூச்சலிட்டு வருவது யாரை ஏமாற்றுவதற்காக?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
விஜய்யின் ஆந்திரா பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? : தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி!
-
மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
-
“மதத்தைக் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது !” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!