Politics
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
சென்னை கோயம்பேட்டில் நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 9 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வரும் நிலையில், அவர்கள் இன்று (ஆக.9) மனித சங்கிலியாக நின்று நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதில் தி.மு.க சார்பில் கலந்துகொண்டதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த, தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி பேசியது பின்வருமாறு,
“தமிழ்நாட்டின் ஒற்றைக் குரல் Fair NEET அல்ல; Ban NEET என்பது தான். பாசிச பா.ஜ.க அரசு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டு;. தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கை.
தமிழ்நாட்டில் நீட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கு இணங்க தி.மு.க மாணவர் அணி சார்பில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.
தேசிய அளவில் மாணவர்கள் போராட்டத்தால் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தாலும், பல இளைஞர்கள் மரணத்திற்கு காரணமான நீட் எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்.
நீட் நீக்கத்திற்காக தி.மு.க அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
நீட் விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து நீதிமன்றத்திலும் கோரிக்கை வைத்து வருகிறோம்.
இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு செவி சாய்த்து கேட்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து நீட் விலக்கு போராட்டம் தொடரும்.”
Also Read
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?
-
கனிமொழி எம்.பி-யின் ஒற்றைப் பதிவு.. சமூக வலைதளங்களில் படு வைரல்!
-
“தவெக பெயரை குறிப்பிடாதது ஏன்?” - பண மோசடியில் சிக்கிய வர்ஷினி வெங்கட் விவகாரத்தில் திமுக கேள்வி!
-
“இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி வகிக்க ஞானேஷ் குமார் தகுதியற்றவர்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்.. ஆனால்.. செப். 27 ஞாயிற்றுக்கிழமை இயங்கும்.. நிதியமைச்சகம் அறிவிப்பு!