Politics
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் உரிமையைப் பெற்றுத்தர தவறிவரும் த.வெ.க அரசு, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க திசைதிருப்பல் அரசியலை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு குட்டு வைக்கும் வகையில், முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,
“தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி, உங்கள் தந்தை, உங்கள் தாத்தா காவேரி நீர் பெற என்ன செய்தார் என்று கேட்கும் அரைவேக்காடு அமைச்சரே! நீங்கள் 9 வயது சின்ன பையனாக இருந்த போது 1990 ஜூன் 2-ல் காவேரி தீர்ப்பாயம் அமைத்தவர் கலைஞர்.
பக்ரா நங்கல் நதிநீர் வாரியம் போல், காவேரி நதிநீர் வாரியத்தையும் (kaveri water management board) அமைக்க 2018 பிப்ரவரி 16 தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது, பாஜக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றி காவேரி மேலாண்மை ஆணையம் (kaveri water management authority) என்று அமைக்க கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும் பாஜக துரோகம் செய்த போது #RSS இயக்கத்தில் இருந்த நீங்கள் கலைஞர் பற்றியோ காவேரி உரிமை பற்றியோ பேச எந்த தகுதியும் உரிமையும் இல்லை.
பாஜக ஆட்சிக்கும் உங்கள் ஆட்சிக்கும் பாலமாக இருந்து உங்கள் ஆட்சியை தாங்கி பிடிக்கும் டெல்லி பிரதிநிதி பெங்களூர் வெங்கட் நாராயணா, தனிச் செயலர் ஆந்திர விஷ்ணு ரெட்டி, நீர்வளத்துறை அமைச்சர் பாண்டிச்சேரி புஸ்ஸி ஆனந்த் உட்பட நீங்கள் நால்வரும் காவேரி பிரச்சினையையும், தமிழ்நாட்டு மக்களையும் மறந்து, #காவேரிமேகதாது படம் தயாரித்து கர்நாடகாவில் ஓட்டுவதற்கு ஒத்திகை பார்த்து கொண்டிருக்கிறீர்களா CM sir ?
“ஜனநாயகன்” பட ரிலீஸ்-க்கு முன் கர்நாடகம் சென்று உங்கள் ரசிகர்களை உற்சாகமூட்டிய முதலமைச்சரே !தற்போது முடங்கிக் கிடக்கும் படத்தை ஓட்டுவதற்காக மீண்டும் கர்நாடகம் செல்ல துடிக்கிறீர்களா CM Sir?
தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து ஒன்றிய அரசிடம் பறிகொடுத்து வரும் உங்கள் முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?”
Also Read
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!