Politics
“கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!” : உதயநிதி ஸ்டாலின்!
மதுரை மாவட்டத்தில் உள்ள ஜான்சிராணி பூங்காவில், 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி, தி.மு.க இளைஞர் அணி என்கிற சார்பு அணியை முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்தார்.
இதற்கு முதல் செயலாளராக பொறுப்பேற்று சுமார் 20 ஆண்டுகள், இளைஞர் அணியைக் கட்டி எழுப்பிய பெருமை, இன்றைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு.
அத்தகு சிறப்பு வாய்ந்த இளைஞர் அணியை, தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விளங்கும் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று, இளைஞர்களை வழிநடத்திச் செல்கிறார்.
இந்நிலையில், கழக இளைஞர் அணி இன்று (ஜூலை 20) 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, அடுத்த இளைஞர் அணியின் “அடுத்தக்கட்டத் தொடரை ஆரம்பிக்கலாமா!” என்று இளைஞர்களுக்கு புத்துணர்வூட்டும் வகையில், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
“கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மிசா குழுவைக் கொண்டு தொடங்கப்பட்ட நம் தி.மு.க இளைஞர் அணி, இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி - மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!”
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!