Politics
கீழடியில் பார்வையா? ரீல்ஸ் பற்றாக்குறையா? ட்ரோன் கேமராவுடன் அமைச்சர் ராஜ்மோகன் குழுவின் அத்துமீறல்!
கீழடி தொல்பொருள் அருங்காட்சியகம், திறந்த வெளி அருங்காட்சியகம், 11ம் கட்ட அகழாய்வு உள்ளிட்டவற்றை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (ஜூலை 19) பார்வையிட்டார்.
பின்னர் திறந்த வெளி அருங்காட்சியகம், 11ம் கட்ட அகழாய்வு நடந்து வரும் இடம் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார். அவருக்கு கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் விளக்கமளித்தார். தவெக அமைச்சர் வருவதை ஒட்டி தவெக வினர் ஏராளமானோர், கார், டூவீலரில் கீழடிக்கு வந்திருந்தனர்.
திறந்த வெளி அருங்காட்சியகத்தினுள் அமைச்சர், ஆட்சியர் கார்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும், மற்ற வாகனங்கள் வெளியிலேயே நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது இருப்பினும் அருங்காட்சியக புல்வெளி வரை காரை கொண்டு வந்து த்வெக-வினர் நிறுத்தியிருந்தனர்.
மேலும், திறந்த வெளி அருங்காட்சியகம், அகழாய்வு பணிகள் நடைபெறும் இடங்களை வெளி நபர்கள் படம் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து தகுந்த அறிவுறுத்தல் வழங்கியும் அமைச்சருடன் வந்த கட்சியினர் ட்ரோன் கேமரா பயன்படுத்தி அமைச்சர் வருவது, அதிகாரிகளுடன் உரையாடுவது, கேள்வி கேட்பது என அனைத்தையும் பதிவு செய்தனர். தொல்லியல் துறை அதிகாரிகள் தடை செய்தும் அதனையும் மீறி ட்ரோன் கேமராவில் படம் பிடித்துள்ளனர்.
தவெக அமைச்சர் என்றால் புது விதிமுறைகள் ஏதும் விதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ரீல்ஸ்ஸீன் அளவு குறைவாக உள்ளது என நினைத்து தனது குழுவினரை சுற்றி சுழன்று ரீல்ஸூக்காக இப்படி செய்ய சொன்னாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே தவெக-வினர் ஆய்வுக்குச் சென்றாலே அது அடுத்த ஓரிரு நாட்களில் இண்ஸ்டாகிராமில் சினிமா பாடல்களுடன் ரீல்ஸாக வலம் வரும். இப்படியிருக்கையில் தொடர்ந்து ஆய்வுகளுக்குச் சென்று சர்ச்சையாவது தவெக-வினருக்கு ஒன்றும் புதிதல்ல.
ஆனால், ஒரு இடத்திற்கு ஆய்வுக்குச் சென்றால் அமைச்சர் என்கிற முறையில் சில அதிகாரப்பூர்வ நடைமுறைகள் இருந்தும் அதனை அமைச்சரே மீறுவது எவ்வித அணுகுமுறை எனத் தெரியவில்லை.
அடுத்தடுத்து கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடச் செல்கிறவர்கள் இதுபோன்று ட்ரோன் கேமராவுடன் சென்றால் விதிமுறைகள் அனுமதிக்குமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்று முடியுமோ.. தவெக ரீல்ஸ் மோகம்.
Also Read
-
“திமுக-வை வழக்குகளால் அழிக்க முடியாது.. எத்தனை பேரை சிறைவைக்க முடியும்” - ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!
-
FIFA 2026: மிரட்டல் ஆட்டத்தால் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்.. சொதப்பிய அர்ஜென்டினா.. எங்கு தடுமாறியது!
-
‘நாடாளுமன்றம் நோக்கிய இளைஞர்கள் பேரணி.. காவல் துறை தடியடிக்கு கண்டனம்’ : திமுக தலைமைக் கழகம்!
-
“பேசினாலே கைது என்ற த.வெ.க அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்!” : உதயநிதி ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டிற்கான ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்கப்போவது எப்போது?” : தயாநிதி மாறன் எம்.பி கேள்வி!