Politics
“காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றம்!” : உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் ஏற்கனவே காவலர்கள் பற்றாக்குறை இருந்துவரும் நிலையில், நடப்பாண்டிற்கான காவலர்கள் நியமனத்தை மேலும் ஓராண்டிற்கு தள்ளி வைக்கும் அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதனைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
“தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.
இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.
எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.”
Also Read
-
மீண்டும் மீண்டுமா.. பாதியிலேயே நின்ற அரசுப் பேருந்து ? லோடு ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து செல்லும் அவலம்!
-
வெளியானது 2027-ஆம் ஆண்டு அரசு விடுமுறைப் பட்டியல்.. இத்தனையும் சனி, ஞாயிறா? : முழுப் பட்டியல் உள்ளே!
-
தமிழ்நாட்டு வீராங்கனை மனிஷா ராமதாசுக்கு என் பாராட்டுகள்! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
காணாமல்போன 7 வயது சிறுமியைக் கண்டுபிடிப்பதில் தொடரும் தாமதம்! : தவெக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!
-
பழக்க தோஷத்தில் இந்த திட்டத்தையும்... : த.வெ.க அரசுக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!