Politics
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
கன்னியாகுமரி, நாகர்கோவிலில் விசாரணைக் கைதி சபரிவர்மன் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வரும் நிலையில், இது குறித்து முதல்வர் விஜய் தற்போது வரை மவுனம் காத்துவருகிறார் பொதுமக்களை மேலும் கோபத்திற்கு ஆளாக்குகிறது.
எதற்குமே வாய் திறக்காமல் மவுனமாக கடந்து சென்று விடலாம் என முதல்வர் விஜய் நினைக்கிறாரா? அல்லது நாம் இத்தனை நாள் ஆடிய நாடகம் முதல்வர் பதவியில் அமரத் தானே. அது நிறைவேறி விட்டது. பிறகென்ன என்ற நினைப்பில் இருக்கிறாரா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.
இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்,
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பை சேர்ந்த விசாரணை கைதி சபரிவர்மனை கொடூரமாக அடித்தே கொன்றிருக்கிறது முதல்வர் விஜய்யின் கட்டுப்பாட்டிலுள்ள தவெக காவல்துறை. சபரிவர்மனின் இறப்பில் நீதி கிடைத்திட வேண்டுமெனில் , உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்!
நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த சபரீவர்மன் சிறையில் உள்ள அறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரேத பரிசோதனையில் சபரிவர்மனை போலீசார் அடித்து கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் விஜய் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
'இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது' என்றுகூட முதல்வர் விஜய் சொல்ல தயங்குகிறார் என்றால் இவ்விவகாரத்தை மூடி மறைக்கப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. எனவே உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் வலியுறுத்துகிறேன்! வாய திறங்க CM சார்! என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
-
ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?