Politics
மூடப்பட்ட 5 அரசுப்பள்ளிகள்.. சேர்க்கை இல்லை என காரணம் கூறிய அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் நிலை!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில், மாணவர் சேர்க்கையில் கல்வித்துறை அலட்சியம் காட்டியதால் 5 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்ட அவல நிலை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில், மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேளாம்பூண்டி, எம், கொல்லப்பட்டி, குள்ளந்தைலி வலசு, குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வானவராயநல்லூர், தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாளரப்பட்டி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகள் இந்நிலைக்கு ஆளாகியுள்ளது.
மூடிக்கிடக்கும் பள்ளிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்குமா, கல்வித்துறை? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
திமுக ஆட்சியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து மாணவர்களுக்காக காலை உணவுத்திட்டம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி சேர்க்கையை அதிகரித்த நிலையில்;
இதுபோன்று அலட்சியமாக செயல்பட்டு பள்ளியையே மூடும் நிலைக்கு தள்ளிய தவெக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!