Politics
“டெல்லி சென்று கழக அரசின் சாதனைகளுக்கு Sticker ஒட்டியிருக்கிறது SofaModel அரசு” : உதயநிதி ஸ்டாலின் பளார்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (ஜூன் 11) அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்ற 11வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மாநிலங்களின் நலன்கள், மாநிலங்களுக்குத் தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, நிதிப் பற்றாக்குறை, திட்டங்களுக்குத் தேவையான நிதிகள் மற்றும் ஒன்றிய அரசின் நிதிப்பங்கு மாநிலங்களுக்கு விரைவாக வழங்குவது. மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துரைத்து, செயல்படுத்தவுள்ள திட்டங்களுக்கு விரைவாக ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்குதல், புதிய திட்டங்களுக்கு அனுமதி அளித்தல், மாநிலத்தின் தொலைநோக்குத் திட்டங்கள் போன்றவை குறித்து அந்தந்த மாநில அரசுகளின் முதலமைச்சர்கள் எடுத்துரைத்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வார்கள்.
இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் அவர்கள் பங்கெடுத்து உரையாற்றினார். அதில் தமிழ்நாடு அரசு இந்த சாதனைகளையெல்லாம் செய்துள்ளது என திராவிட மாடல் ஆட்சியில், முன்னாள் முதலமைச்சர் விஜய் அவர்கள் மேற்கொண்ட திட்டங்களையும் சாதனைகளையும் ஏதோ தவெக ஆட்சியில் செய்த சாதனைகளைப் போலவே Sticket ஒட்டி பெருமிதம் தேடிக்கொண்டார்.
குறிப்பாக கர்நாடக மாநில அரசு மேகதாது அணையின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என உறுதியாக தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பிரதமருடன் தனியாக சந்திப்பு நடத்தி மேகதாது அணை விவகாரம் குறித்தும் அனுமதி வழங்குவது குறித்தும் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், முதல்வர் விஜயோ நிதி ஆயோக் கூட்டத்திலும் மேகதாது அணை குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இப்படியாக முடிந்திருக்கிறது முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கர்நாடகம் சென்ற விஜய் - காவிரி நீரை கொண்டு வருவாரா? : தி.மு.க கேள்வி!
-
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விஜய் எடுக்கும் நடவடிக்கையின் லட்சணம் : உண்மையை தோலுரித்த முரசொலி!
-
ஸ்ரீவைகுண்டம் விவகாரம் - யார் அந்த மேலிடம்? : முதல்வர் விஜய்க்கு, உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
“பகலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள்.. இரவில் மின்வெட்டு..” : TVK ஆட்சியின் சாதனை - முரசொலி காட்டம்!
-
“முதல்வர் விஜயின் முகமூடியைக் கிழித்த 31 நாட்கள்.. ரத்தக்களரியான மாநில சட்டம்-ஒழுங்கு” : திமுக IT Wing!