Politics

“அட்மினிஸ்ட்ரேஷனில் ‘அ’ கூடத் தெரியாத குதிரை பேர சி.எம் தானே நீங்க!” : திமுக ITWing கடும் விமர்சனம்!

நேத்து பெய்த மழையில் இன்னைக்கு முளைத்த விஷக்காளான் நீங்க!

மக்கள் போராட்டங்களுக்காக ஒரு நாள் கூட வெயிலில் நின்று பழகாத, வியர்வையைப் பார்த்தாலே 'அய்யய்யோ' எனப் பதறும் ஒருவர் திடீரென்று 'அரசியல்' வேஷம் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்.

சொந்தமாக 118 சீட்டுகளைக் கூட வெல்ல வக்கில்லாமல், அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, ஆட்சியைப் பிடிக்கக் கூட்டணி கட்சிகளிடம் பிச்சை எடுத்த சோபாவின் புகழ் "குதிரை பேர சி.எம்" தானே நீங்க! உங்களுக்கு எங்களைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

அட்மினிஸ்ட்ரேஷனில் 'அ' கூடத் தெரியாத, எந்த அடிப்படை அரசியல் அறிவும் இல்லாத ஒரு தற்குறியின் கையில் அதிகாரம் சிக்கியிருப்பதால்தான், இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து மாநிலம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது!

அரசியலமைப்பு நெறிமுறைகளோ, மாநில உரிமையோ கொஞ்சமாவது தெரிந்திருக்கிறதா உங்களுக்கு? முதலமைச்சராகப் பதவியேற்கும் முதல் நாளிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 'வந்தே மாதரத்தை' முதலில் வாசிக்க விட்டு, கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்த சுயமரியாதையற்ற சி.எம் தானே நீங்க!

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் இதே அவமானம் இரண்டு முறை தொடர்ந்ததே, அதைத் தட்டிக்கேட்கத் துப்பில்லாத தொடைநடுங்கி சி.எம் தானே நீங்க? வழக்கம்போல மைக்கைப் பிடித்து ஆடியோ லான்ச் மாதிரி கத்த வந்தப்போ, ஆளுநர் "ஜஸ்ட் வெயிட்" என்று முகத்திலேயே அடித்த மாதிரி சொன்னபோது, ரோஷமில்லாமல் வாயடைத்து நின்ற நபர் தானே நீங்க!

மாநில மானத்தை ஆளுநரிடம் தான் அடகு வைத்தீர்கள் என்றால், மாநில உரிமையைக் கர்நாடகாவிடம் பறிகொடுத்து நிற்கிறீர்கள்! "தமிழ்நாட்டில் இப்போது உட்கார்ந்திருப்பது ஒரு டம்மி சி.எம்; அவரால் எங்களை எதுவும் எதிர்க்க முடியாது, நாங்க மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்" என்று கர்நாடகா துள்ளிக் குதித்துக் கொக்கரிக்கிறது.

தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரி உரிமையைக் காக்கத் துப்பில்லாமல், அண்டை மாநிலத்துக்காரன் முகத்தில் கரியைப் பூசும்போதும் திருப்பிப் பேசத் தைரியமில்லாத கையாலாகாத சி.எம் நீங்க!

மாலை ஆறு மணிக்கு மேல் கேரவனுக்குள்ளும் ஏசி ரூம்குள்ளும் ஒளியும் உங்களுக்கு மக்களின் வலி என்ன தெரியும்? புயல், வெள்ளம் என்று மக்கள் தவித்தபோதோ, உரிமைக்காகப் போராடியபோதோ ஒரு நாளாகிலும் களத்திற்கு வந்தீர்களா?

சொகுசு வாழ்க்கையில் காலத்தைக் கழித்துவிட்டு, திடீரென்று 'ரட்சகர்' மாதிரி வரும் இந்த 'டூரிஸ்ட் அரசியல்வாதி'க்கு மற்றவர்களைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?

சொந்தப் பொறுப்புகளையே தட்டிக்கழிக்கும் ஒரு சோம்பேறியால் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியுமா வெட்டி சி.எம்?

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற குறைந்தபட்ச சட்ட விதிகளோ, அறிவோ கூட இல்லாத மக்கு சி.எம் நீங்க! கொள்கையை வைத்து ஓட்டுக் கேட்க வக்கில்லாமல், பிஞ்சுக் குழந்தைகளைத் தூண்டிவிட்ட உங்களது அரசியல் வறுமையும் கோழைத்தனமும் தான் உங்களது அக்மார்க் 'நாறசக்தி' அரசியல்!

ஆட்சியைப் பிடிப்பதற்காக நீங்க செய்த குதிரை பேர அரசியலையும், உங்களது காப்பி-பேஸ்ட் அரசியலையும் மூடி மறைக்க எங்களை வம்புக்கு இழுக்காதீங்க!

இந்தச் சோம்பேறித்தனமான சொகுசு அரசியலையும், மாநில உரிமையை அடகு வைக்கும் கோழைத்தனத்தையும் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால், மக்கள் உங்களை அரசியலை விட்டே அடித்து விரட்டுவார்கள்.

அள்ளிவிட்ட வாக்குறுதிகளை உருப்படியாகச் செய்யப் பாருங்கள்; இல்லையென்றால் உங்களது வக்கற்ற, திறமையற்ற அரசு வெகு விரைவில் மக்களால் தூக்கியெறியப்படும்!

Also Read: “கவர்ச்சியால் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றீர்கள்?” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!