Politics

ஒரே நாளில் 7 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து அசத்திய துணை முதலமைச்சர் உதயநிதி! : முழு விவரம் உள்ளே!

தமிழ்நாட்டில் ஏப்.23 அன்று நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.

தி.மு.கழக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நேற்றைய நாள் (மார்ச் 30) தொடங்கினார்.

பிரச்சாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே 3 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இரண்டாம் நாளான இன்று (மார்ச் 31) ஒரே நாளில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்து அசத்தியுள்ளார்.

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கும்;

அரூர் சட்டமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் அ.சண்முகம் அவர்களுக்கும்;

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தருமபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான பழனியப்பன் அவர்களுக்கும்;

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களிடம் கழக வெற்றி வேட்பாளர் செந்தில் குமார் அவர்களுக்கும்;

தளி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளரான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் அவர்களுக்கும்;

வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சீனிவாசன் அவர்களுக்கும்;

ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா அவர்களுக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது, தமிழ்நாடு என்றுமே டெல்லியின் ஆதிக்கத்துக்கு அடிபணியாது என்பதை நிரூபிக்க, தமிழ்நாடெங்கும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்ல வேண்டியதன் அவசியத்தை விளக்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Also Read: தேர்தலுக்கு தயாராகும் களம்! - ஏப்.3 அன்று திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!