Politics
“NDA கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? அ.தி.மு.க.வா? அல்லது பா.ஜ.க.வா?” : அமைச்சர் சேகர்பாபு கேள்வி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி, மக்களின் பேராதரவுடன் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் வேளையில், தோல்வி அச்சத்தில் பல அவதூறுகளை பரப்பி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தி.மு.க ஆட்சியில் சாதி மத மோதல்கள் இல்லை, குட்கா வழக்கில் எந்த அமைச்சரும் சிக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தெரியாது என்று கூறியவர் எடப்பாடி பழனிசாமி. அவர், சட்டம் ஒழுங்கு பற்றி பேச எள்ளளவும் தகுதியில்லாதவர்.
தி.மு.க தலைமையிலான கூட்டணி என்பது மதவாதக் கூட்டணி இல்லை, மனிதநேயமிக்க கூட்டணி. தி.மு.க கூட்டணி அமித்ஷாவின் அடிமை கூட்டணி இல்லை, கொள்கைக் கூட்டணி. தமிழ்நாட்டில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிற கூட்டணி.
இதே வேளையில், தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை தாங்குவதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார்.
ஆனால், கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் வேட்பாளர்கள், அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடாமல், பா.ஜ.க.வின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட இருக்கின்றனர். உண்மையில் கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? அ.தி.மு.க.வா? அல்லது பா.ஜ.க.வா?
என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய பா.ஜ.க அரசு மேற்கொள்ளும் விலைவாசி உயர்வுகளை கண்டுகொள்ளாமல், தமிழ்நாடு அரசு மீது அவதூறு பரப்பி வருகிறார்.
கொரோனா காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி வீதிக்கு வந்து மக்களை சந்திக்கவில்லை. ஆனால், அன்றும் வீதியில் இறங்கி மக்களுக்கு உணவு உடைகளை வழங்கியவர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, நம் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்தது. அச்சிக்கல், தற்போதைய தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளால் சரிசெய்யப்பட்டுள்ளது.
ஏரிகளை தூர்வாரி, சரியான மழைநீர் வடிகால்கள் அமைத்து பெரும் மழைக்கும் சென்னையில் நீர் தேங்காத நிலையை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
குறிப்பாக, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வடசென்னையை, வாடாத சென்னையாக மாற்றியுள்ள பெருமையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே சேரும்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மக்களைக் கை கழுவிவிட்டு..‘நன்றாகக் கை கழுவிக் கொள்ளுங்கள்’ என்றவர் மோடி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!
-
RCB அணியை வாங்கியது இவர்களா? மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றம்.. அணியில் மாற்றம் நிகழுமா! - முழு விவரம்!
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!