Politics

ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!

இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்றும் (டிச.12) நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், மாநிலங்களவை கூட்டம் தொடங்கியபோது, ஒன்றிய அரசின் சார்பில் அமைச்சர்கள் யாரும் வருகை தரவில்லை.

அமைச்சர்கள் இல்லாமல் மாநிலங்களவை இயங்குவது எப்படி சரியாக இருக்கும் என மாநிலங்களவையில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி.இராதாகிருஷ்ணன், ஒன்றிய அமைச்சர்களை அவைக்கு வரவழைக்க உத்தரவிட்டு, சிறிது நேரம் அவை செயல்பாடுகளை ஒத்திவைத்தார்.

இதன் மூலம், வரலாற்றில் இல்லாத வகையில் ஒன்றிய அமைச்சர்கள் வருகையின்மையால் நாடாளுமன்றம் செயல்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிகழ்வு, முதன்முறையாக அரங்கேறியுள்ளது.

இதன் பிறகு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கிய நிலையில், அமைச்சர்களின் அலட்சியப் போக்கிற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வருத்தம் தெரிவித்தார்.

இதனிடையே, நாடாளுமன்ற மாநிலங்களவையில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சிவராஜ் பாட்டில் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கப்படாதது கடும் சர்ச்சையாகியுள்ளது.

Also Read: திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!