Politics

“பிரதமர் மோடியின் ‘கபட நாடகம்’ அடங்கிய உரை!” : ஜெய்ராம் ரமேஷ் எம்.பி கண்டனம்!

இந்திய அளவில் S.I.R உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று (டிச.1) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி கடமைக்காக சில கருத்துகளை முன்வைத்து உரையாற்றினார். இதனைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி தெரிவித்தது பின்வருமாறு,

“நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, “நாடாளுமன்ற மக்களவையும் மாநிலங்களவையும் ஒழுங்காக இயங்க வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை” என நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

நாடாளுமன்றம் ஒழுங்காக இயங்காமல் இருக்கிறது என்றால், அதற்கு முதன்மையான காரணமே பிரதமர் மோடியும், அவரது புறக்கணிப்பு நடவடிக்கைகளும்தான்.

மக்களுக்கு முக்கியத்துவம் தரும் கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் போது, அதனை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்குவதில் எப்போதுமே, பிரதமர் மோடிக்கு உடன்பாடு இருந்ததில்லை. அது இப்போதும் தொடர்கிறது.

பிரதமர் மோடி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதும் இல்லை, எதிர்க்கட்சிகளின் கருத்தை கருத்தில் கொள்வதும் இல்லை.

இப்படியான சூழலில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி நிகழ்த்திய உரையில் வெறும் கபட நாடகம் இருந்ததே தவிர வேறொன்றுமில்லை.”

Also Read: “இவை தீர்மானங்கள் மட்டுமல்ல! ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதான குற்றப்பத்திரிக்கை!” : முரசொலி தலையங்கம்!