Politics
“திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன!” : அமைச்சர் இ.பெரியசாமி குற்றச்சாட்டு!
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடு நடந்திருக்கிறது என அமைச்சர் இ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து, அமைச்சர் இ.பெரியசாமி அளித்த பேட்டி பின்வருமாறு,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, ஏறக்குறைய 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 26 வாக்குச்சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றிருக்கிறது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
சின்னாளப்பட்டி பேரூராட்சியில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 7,227 வாக்காளர்களின் பெயர்களில் ‘இடம்பெயர்ந்துவிட்டார்கள்’ (Shifted) எனக் குறிப்பிடப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
நேற்று (நவ.29) காலை முதலே ஆத்தூர் வட்டாட்சியர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரடியாகச் சென்று அங்கிருந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை (BLO) வற்புறுத்தி, “இனி சேரும் வாக்குகளை ‘Shifted’ என்று போடுங்கள்” எனக் கூறி வாக்காளர் சேர்க்கைப் பணியை முடித்துவைக்கச் சொல்லி இருக்கிறார்.
ஆத்தூர் தொகுதியில் மட்டும் மொத்தம் 21,800 முதல் 22,000 வாக்குகள் வரை இதுபோன்று ‘Shifted’ எனப் பதிவு செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
சிறப்புச் சேர்க்கைப் பணி டிசம்பர் இரண்டாம் வாரம் வரை தொடர வேண்டிய நிலையில் இரவோடு இரவாக இப்பணியை வட்டாட்சியர் முடித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுத் தேர்தலில் சின்னாளப்பட்டியில் 17,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது நடைபெற்ற சிறப்புச் சேர்க்கையில் 16,800 வாக்குகளே சேர்க்கப்பட்டுள்ளது.
சின்னாளப்பட்டி பகுதியில் பலர் வணிக காரணங்களுக்காக வெளியூர்களுக்குச் சென்று திரும்புபவர்கள் என்பதால் சேர்க்கைக்கான கடைசி நாள் வரை பொறுமையாக இருந்து வாக்காளர் சேர்க்கை பணிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், சேர்க்கைப் பணிகள் அவசரமாக நிறுத்தப்பட்டதால், இன்று வந்த பலரும் வாக்காளராகச் சேர முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெரிய தவறு நடந்துள்ளதற்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!