Politics
பீகார் தேர்தல் : திடீரென உயர்ந்த 3 லட்சம் வாக்காளர்கள்... அம்பலமான தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள்!
பீகாரின் 243 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று (நவ.14) ஒரே கட்டமாக வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி பாஜக கூட்டணி 202 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 34 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பீகார் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் பெரும்பான்மையான தொகுதியை பாஜக (89) கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்த பின்னர், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட, தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.
பீகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியின்போது பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. அதனடிப்படையில் பீகாரில் பல லட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
SIR பணிக்கு பிறகு பீகாரில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 7.42 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆவணத்தில் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை 7.45 கோடியாக இருக்கிறது.
ஆரம்பத்தில் 7.42 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், தேர்தலில் 7.45 கோடி பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளது. அதாவது இறுதி வாக்காளர் பட்டியலை விட சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை எப்படி உயர்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இறுதி பட்டியலை விட தேர்தலுக்குப் பிறகு எப்படி வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்தது என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி உள்ளனர். இதனை சத்தீஸ்கர் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோரும் பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பீகார் தேர்தலுக்கு முன்பே தேர்தல் ஆணையத்தின் SIR பணிக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனமும் போராட்டமும் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தற்போது SIR மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலும் முறைகேடுகள் நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள், மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
Also Read
-
தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் தொடக்கம்.. உடனே முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன?
-
“தேசவிரோதச் செயல்களை ஏன் தடுக்கவில்லை? தடுக்க முடியவில்லை?” : ஒன்றிய அரசுக்கு முரசொலி கேள்வி!
-
தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை வழங்காத பாஜக அரசு : ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
"100 வருட போராட்டத்திற்கு பிறகு இந்த நிலைமையை அடைந்திருக்கின்றோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
"SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கும் அண்டக் கொடுக்கிறார் அடிமை பழனிசாமி" - திமுக IT விங் விமர்சனம் !