Politics
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!
ஒன்றிய பா.ஜ.க அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மறைமுக கூட்டுறவால் பீகாரில் கடும் விமர்சனத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் குளறுபடிகளுக்கு வித்திடும் வகையிலும் அமைந்துள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரான இது போன்ற நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற முனைப்புடன் நவ.02 அன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், “ஜனநாயக விரோத - சட்ட விரோத S.I.R. முயற்சிகளைத் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும்!” என அனைத்துக் கட்சியினராலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, இன்று (நவ.03) தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (S.I.R) எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
அம்மனுவில், “பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R) செய்தபோது பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. அதற்கு எதிரான வழக்கில் இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. இந்த சூழலில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு மேற்கொள்வது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் காலத்தில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை போன்றவை வருவதால், வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்படும். இதனால் அவர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!