Politics
பீகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு... - அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு !
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 6-ம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலை ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, சிபிஎம்(ML) ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரே அணியில் போட்டியிடுகின்றன. சமீபத்தில் இந்த கட்சிகள் சார்பில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
தொகுதிகள் ஒதுக்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கே இடையே சிக்கல் நீடித்த நிலையில், காங்கிரஸ் கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயங்குவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அதிகாரபூர்வமாகி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் இந்தியா கூட்டணி சார்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பல்வேறு கருத்து கணிப்புகளில் முதல்வர் வேட்பாளராக பீகார் மக்கள் தேஜஸ்வியையே தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !