Politics
ஒரு ரூபாயை மறைத்தாலும் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- தேவநாதனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் மூன்றாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துக்களை முடக்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என உரிமையாளர்களிடமும், நிறுவனங்களிடமும் ஒப்புதல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் தரப்பில் தனக்கு குறைந்தது 6 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கினால் தன்னுடைய சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தனக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ரொக்கங்கள் குறித்த விவரங்களை ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய தேவநாதனுக்கு உத்தரவிட்டார்.இதில், ஒரு சென்ட் நிலம் அல்லது ஒரு ரூபாயை மறைத்தாலும் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து அன்றைய தினம் முடிவெடுக்கப்படும் என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தார்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!