Politics
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படுவதை விமர்சித்த, பா.ஜ.க.வின் அடிமை குரல் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து கோவையில் தி.மு.க மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க மாணவரணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையேற்றார். கோவை மாவட்ட தி.மு.க எம்.பி கணபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது போராட்ட மேடையில் பேசிய மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, “தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.விற்கு பழனிசாமி துணை போவதை கண்டித்தால், தான் ஒரு சாதாரண தொண்டராக இருந்து முதல்வர் ஆனவர் என்கிறார் பழனிசாமி. ஆனால், அவர் சாதாரண தொண்டர் அல்ல. சசிகலா அவர்களால், தங்களது சொத்தை பாதுகாத்துகொள்வார் என நியமிக்கப்பட்ட Watchman தான் எடப்பாடி பழனிசாமி.
நீதிக்கட்சி தொடங்கி பெரியார் வழியில் கழகத்தின் சார்பில் எங்கள் பெயருக்கு பின்பு சாதி வேண்டாம், எங்கள் பெயருக்கு பின்பு பட்டங்கள் வேண்டும் என்று இடஒதுக்கீட்டை ஏற்படுத்தி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என பெயர் பெற்றுள்ளோம்.
ஆனால், அச்சிறப்பை தடுக்க கல்வி நிதி நிறுத்தத்தில் தொடங்கி, தொடர்ந்து மாணவர்களை வஞ்சித்து வருகிறது பா.ஜ.க. அதனை சுயலாபத்திற்காக தூக்கிப்பிடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதன் ஒரு பங்காகதான், அறநிலையத்துறை கல்வி நிறுவனங்கள் மீது பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டும் அமைந்துள்ளது. இவ்விமர்சனம் மக்கள் முகம் சுழிப்பிற்கு உள்ளானதால், கோவையில் “தெரியாமல் உளறிவிட்டேன்” என்கிறார் பழனிசாமி.
நாங்கள் முன்னெடுப்பது வெறும் உளறல் எனும் மழுப்பலுக்கான போராட்டம் அல்ல. தமிழ்நாட்டின் மாணவர்கள் மீதும், கல்விக்கொள்கை மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துகிறது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. அதற்கு ஆதரவாக கைக்கட்டி நின்று, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார் பழனிசாமி. அதற்கான எதிர்ப்புதான் இது” என கண்டனம் தெரிவித்தார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!