Politics
இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம்... இந்திய வெளியுறவுச் செயலாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு !
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். அதோடு ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம் சாட்டிய இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.
எனினும் பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதோடு பாகிஸ்தானின் ராவல்பிண்டி, கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாக இந்த தாக்குதல் போராக உருப்பெறுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், தற்போது நடத்தப்படும் இந்த தாக்குதலை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனிடையே மாலை 5 மணி அளவில் இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். மாலை 5 மணி அளவில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தியதாகவும், இந்த விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !
-
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!