Politics

தமிழ்நாட்டின் சுங்கச்சாவடிகள் மூலம் ரூ. 18,546 கோடி வசூல் - நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் !

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி, செல்வகணபதி, காங்கிரஸ் உறுப்பினர்கள் விஷ்ணு பிரசாத், ஜோதிமணி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.

அதில் தமிழ்நாட்டில் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 31 சுங்க சாவடிகள் புதிதாக தொடங்கப் பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 1063 சுங்கச்சாவடிகள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி , தமிழ்நாட்டில் 2023-24 நிதி ஆண்டு சுங்க சாவடிகள் மூலம் 4,221 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகவும், கடந்த நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் வரையில் 2,871 கோடி வசூலிக்கப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதே போல கடந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் 18,546 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகவும் தோப்பூர் சுங்கச்சாவடி மூலம் 1124 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். அதே போல இது இந்தியாவில் உள்ள முதல் 10 சுங்கச்சாவடிகளில் ஒன்றாக உள்ளது என்றும் அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது" - ஒன்றிய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் !