Politics
மோடியை A1 குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா ? - அமைச்சர் ரகுபதி கேள்வி !
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்று கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் பழிவாங்க மாட்டோம் என்று சொன்னார். ஆனால் மாற்று கட்சியினர் அங்கே எல்லாம் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் பழி பழிவாங்கும் நடவடிக்கையில் அமலாக்கத்துறையினர் ஈடுபடுகிறார்கள் .
அசாம் அதிகாரி ஒருவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிகாரி ஒருவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஒருவர் என பலர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. ஆனால் இவர்கள் எல்லாம் பாஜகவில் ஐக்கியமானதும் அவர்கள் வழக்குகள் எல்லாம் காணாமல் போய்விட்டது.எங்கேயாவது அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதா என சொல்ல முடியுமா? பாஜக அமலாக்க துறையை ஒரு கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு..
பாஜக இன்று போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அது கிடைக்காத சூழ்நிலையில் அண்ணாமலை அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி தவறாக ஏ1 குற்றவாளி என சொல்லி இருக்கிறார். முழுக்க முழுக்க இது சட்டவிரோதமான செயல். அதானியின் செல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருக்கு சொந்தமானது? அந்த பணம் எங்கிருந்து வந்தது? அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
கர்நாடகாவில் எடியூரப்பா பசவராஜ் பொம்மை அவருடைய ஆட்சியில் 40 சதவீதம் கமிஷன் அரசு என்று குற்றச்சாட்டு இருந்தபோது சட்டவிரோத பண பரிமாற்றம் என்று சொல்லி மோடியின் அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? இதற்கெல்லாம் காரணமாக இருந்த மோடி ஏ1 என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா??
அமலாக்கத்துறையை பாஜக ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் என்று சொல்கிறார்கள். ரெய்டு நடந்து எத்தனை நாள் ஆகி இருக்கிறது ஏதாவது ஆதாரம் இருக்கிறதா.? இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக விளக்கமளித்து அதை மறுத்திருக்கின்றார். டெல்லி பாணியில் தமிழ்நாட்டில் அரசியல் செய்துவிடலாம் என்று பாஜக கனவு கண்டு கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள் இங்கே எந்த விதமான பாஜகவினர் பாய்ச்சலும் செல்லுபடியாகாது .
கல்வி நிதி 2192 கோடி பாஜக அரசு தர மறுக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தில் 3000 கோடி நிதியை தர மறுக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பாஜக போராட தயாரா ? போராட போகின்றோம் என்று அறிவித்துவிட்டு செல்கின்ற போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜகவினரை காவல்துறையினர் வீட்டிலே கைது செய்து இருக்கிறார்கள்.நாங்கள் சொன்னபடி 500 மதுக்கடைகளை மூடியிருக்கிறோம். சந்தர்ப்ப சூழ்நிலையை பார்த்து மீதமுள்ள கடைகளை மூட முதலமைச்சர் முடிவு செய்வார். முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட அண்ணாமலை வந்து பார்க்கட்டும் ? என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்"என்று கூறினார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!