Politics
தொகுதி மறுசீரமைப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு கே.டி.ராமராவ் ஆதரவு!
ஒன்றியத்தில் ஆட்சி வகிக்கும் பா.ஜ.க.விற்கு தொடர் இடையூறாக விளங்கி வரும் தென் மாநிலங்களின் நிகராளித்துவத்தை கூண்டோடு அழிக்கும் போக்காகவே, ஒன்றிய அரசு திட்டமிடும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) முன்மொழிவு அமைந்துள்ளது.
இந்த மறுசீரமைப்பு முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், மக்களவையில் தமிழ்நாடு பெற்றிருக்கிற 38 என்ற நிகராளித்துவ எண்ணிக்கை 31ஆக குறையும் ஆபத்து ஏற்படும். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, பா.ஜ.க.வை எதிர்த்து குரல் எழுப்பும் ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களுக்கும் இதே நிலைதான்.
இதனை உணர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கட்சி பாகுபாடு இன்றி தமிழ்நாட்டின் உரிமையை மீட்டெடுக்க அனைத்து கட்சிக்கு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி தலைவர் கே.டி.ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்திற்கு உடன்படுகிறேன். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட தென் மாநிலங்களை தண்டிப்பது நியாயமற்றது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி முறைக்கும் எதிரானது.தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதாக இருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல், மாநிலங்களின் நிதி பங்களிப்பு அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!