Politics

மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்.25ஆம் தேதி போராட்டம் - மாணவர் இயக்கங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு - மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO-TN) மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், திமுக மாணவர் அணி செயலாளருமான எழிலரசன் எம்.எல்.ஏ, மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜி.அரவிந்த்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம் (SFI), திராவிட மாணவர் கழகம் (DSF), தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் (NSUI), ம.தி.மு.க. மாணவர் அணி (MDMK), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), முற்போக்கு மாணவர் கழகம் (RSF), முஸ்லிம் மாணவர் பேரவை (MSF), சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI), மாணவர் இந்தியா (MI), இந்திய மாணவ இஸ்லாமியர் அமைப்பு (SIO), புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி (RSYF), அனைத்திந்திய ஜனநாயக மாணவர் மன்றம் (AIDSO), மக்கள் நீதி மய்யம் மாணவர் அணி (MNM), அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம், திராவிட மாணவர் பேரவை உள்ளிட்ட மாணவர் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், "வருகின்ற 25ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அத்தனை அமைப்புகளின் சார்பாக மாணவர்கள் பெருந்திறல் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம். ஒன்றிய அரசு அலுவலர்களை நோக்கி பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தை நடந்த தீர்மானித்துள்ளோம்.

வருகின்ற காலங்களில் மாணவர்களிடம் யூஜிசி குறித்தும், மாணவர்களின் உரிமையை பறிக்கும் பாஜக அரசு குறித்தும் தெருமுனை கூட்டங்கள் மூலமாகவும்,இணையதளங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்யப்படும். மேலும் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரகங்கள் நடத்தப்படும். அதோடு, தீவிரமான ரயில் மறியல் போராட்டம் டெல்லியில் நமாபெரும் பேரணி போன்ற போராட்டங்கள் நடத்தப்படும்.

உத்திரபிரதேசத்தில் மாநில பாடத் தேர்வில் 10 லட்சம் தோல்வி அடைந்துள்ளனர். இரண்டு லட்சம் பேர் தேர்வே எழுதவில்லை. இப்படிப்பட்ட ஒரு கேவலமான நிலையை நாட்டின் பிரதமர் அறிந்து இந்தியை முதலில் அவர்களுக்கு கற்றுத் தாருங்கள்"என்று கூறினார்.

Also Read: தலைமைத் தேர்தல் ஆணையரை பண்பற்ற முறையில் நியமனம் செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு - முரசொலி விமர்சனம் !