Politics

"அரசின் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம்" - RN ரவிக்கு பாடம் எடுத்த மோடி !

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் கடந்த ஜானுவாரி மாதம் நடைபெற்றது. முதலில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் உரையை படிக்காமலேயே அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

அதே போல கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த ‘திராவிட மாடல்’ , தமிழ்நாடு அமைதிப் பூங்கா, பெரியார்- அண்ணா- கலைஞர், அம்பேத்கர், காமராசர் ஆகிய வார்த்தைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஒன்றிய அரசின் உரையை வாசிக்கிறார். அதே போல் மாநில சட்டமன்றங்களில் அந்தந்த மாநில அரசுகள் வழங்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பதும் நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம் ஆகும்.

50 ஆண்டுகளாக குஜராத் சட்டமன்றத்தில் ஆளுநர்கள் உரையாற்றியதை நான் முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்ற பொன்விழாவின் போது புத்தகமாக தொகுத்து வெளியிட்டுள்ளேன்"என்று கூறினார். இதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இதனை கூறவேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Also Read: கீழடி ஆய்வறிக்கை எப்போது வெளியிடப்படும்? - திமுக எம்.பி கனிமொழியின் கேள்விக்கு ஒன்றிய அரசின் பதில் என்ன ?