Politics
சீமானின் கருத்துக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு : கொத்து கொத்தாக விலகும் தொண்டர்கள் ! கட்சியில் பிளவா ?
பெரியார் பற்றி சீமான் அவதூறாக பேசியதற்கு தமிழ்நாட்டில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து சீமானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பெரியார் குறித்த சீமானின் கருத்து அவரின் சொந்த கருத்து, அதற்கும் கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செகதீச பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது! ஆரிய வைதிக பிராமண,இந்துத்துவாவை,இந்தியை, இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியர்களின் முதல் கடமை!பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இதுதான் நோக்கம்.
நமது உயிர் மூச்சான தமிழ் ஈழத்தையும்,தலைவர் மேதகுவையும் ,தமிழை ஆட்சி மொழியாக வழிபாட்டுமொழியாக வழக்காடு மொழியாக,ஏற்றுக் கொள்கிறார்கள்,இந்துத்துவா வாதிகள் ஏற்றுக் கொள்கிறார்களா?அனைத்து சாதியும் அர்ச்சகர்ஆகலாம் என்பதை பெரியாரியவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள்,இந்துத்துவாதிகள் எதிர்க்கிறார்கள்,தேசிய கல்விக் கொள்கையை பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் எதிர்கிறார்கள்!இந்துத்துவாவாதிகள் திணிக்கிறார்கள்.
ஒரே நாடு,ஒரே தேர்தல் ,ஒரே மொழி,ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்எஸ்எஸ் பசாக தினிக்கிறது, பெரியாரியவாதிகள் எதிர்க்கிறார்கள்,திராவிட கருத்தியல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கருத்தியல் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழையும்,தமிழர்களையையும் அழித்து வந்தது ஆரியம் தான். நாம் தமிழர் கட்சியை துவக்கியதும்,அன்றைக்கு அரவனைத்தவர்களும் மார்க்சிய,பெரியாரிய, அம்பேத்காரிஸட்டுகள் தான்,திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே ஒழிய,நாம் தமிழரின் ஒட்டு மொத்த கருத்தல்ல,ஆரியம்தான் தமிழனின் முதல் பகை ,சீமானின் கருத்து ஆர்எஸ்எஸ்,பாசக,சங்கபரிவார் அமைப்புகளுங்கு துணை போகுமே ஒழிய ஒருபோதும் தமிழ் தேசியம் வெல்ல உதவாது.
”தமிழ் தேசியமானது தமிழ் பேசும் சமூகத்தின் அக முரண்பாடுகளை த் தீர்த்து அதை சரியன அரசியல் பாதையில் அணி திரட்டக்கூடிய ஒரு கருத்தியலாக வளர்த்தெடுக்கப்படாமல் அதன் பாட்டிலேயே விடப்படுமானால் சந்தர்ப்பாவாதிகளின் நுனி நாவால் புரட்டப்படும் ஒரு வெற்றுச் சொற்றொடராகவே அது இருக்குமாயின் எதிர்காலத்தில் மீண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படபோகும் இன அழிப்புப்போர் அச்சுறுத்தல் கூட எமது சமூகத்தை ஒன்று திரட்டுவதற்கு போதாதாகிவிடும்”(“தராக்கி சிவராம்” தலைவர் அவர்களால் “மா மனிதர் என்று பட்டம் சூட்டப்பட்டவர்)சீமான் அவர்கள் திராவிடத்தையும்,பெரியாரையும் ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகமால் நட்பு முரணோடு கைகோர்த்து தமிழ் தேசியம் வெல்ல காலத்திற்கு ஏற்றார்போல் வேலைத்திட்டத்தை தயார் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதே போல பெரியார் குறித்த சீமானின் கருத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலாளர் மா.பா.அழகரசன், சேலம் மாநகர் மாவட்ட வணிகர் பாசறை இணைச் செயலாளர் வசந்தகுமார், சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன், ஓமலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட 100 க்கும் மேற்ப்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!