Politics
‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதா முன்மொழிவு! : ஒன்றிய அமைச்சர்களே புறக்கணித்ததால் பா.ஜ.க அதிருப்தி!
இந்திய ஒன்றியத்தை ஒற்றை ஆளுமைக்குள் கொண்டு வர, கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மாநில அதிகாரங்களை முடக்கும் வகையில், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரே முறையில் கல்வி, வேற்று மொழியில் சட்டங்கள், திட்டங்கள், அமைச்சகங்கள் என இந்தி மொழி பேசாத மாநில மக்களுக்கு இழைக்கப்படும் வஞ்சிப்பு அதிகரித்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கத்தையே முழுவதுமாக அழித்திட ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறைக்கு வித்திட்டு, வஞ்சிப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறையினால், ஒன்றியத்தில் ஆட்சி ஏற்றிருக்கும் கட்சியே ஒட்டுமொத்த மாநிலங்களையும் கைப்பற்றும் நிலை உருவாகும். மக்களின் மக்களாட்சி உரிமையாக கருதப்படும் வாக்கு உரிமை தவறுதலாக பயன்படுத்தப்படும்.
நாட்டின் பெரும்பான்மை மக்களால், சிறுபான்மை மக்கள் வஞ்சிக்கப்படும் நிலை அதிகரிக்கும். குறிப்பாக, வட மாநில மக்களின் தேர்ந்தெடுப்பு, தென் மாநில மக்களின் சமூக உணர்வுகளை அழிக்க நேரிடும். இதனால், இந்தியா கூட்டணி கட்சிகள், ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறைக்கு எதிரான தங்களது எதிர்ப்பை மிகவும் கடுமையாக வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 17) இந்திய நாடாளுமன்ற மக்களவையில் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் முன்மொழிந்தார். அப்போது எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவு இன்றி, ஒன்றிய பா.ஜ.க அரசால் பெரும்பான்மையை நிரூபித்து மசோதாவை சட்டமாக்க இயலாத சூழல் நிலவி வருவதால், ஏற்கனவே பா.ஜ.க அதிருப்தியில் தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில், மசோதா முன்மொழிவின் போது ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜோதில் ஆதித்ய சிந்தியா, கிரிராஜ் சிங் உள்ளிட்ட 20 பா.ஜ.க எம்.பி.க்கள் அவைக்கு வருகையை தராமல் இருந்தது பா.ஜ.க.வினரை மேலும் அதிருப்தியடைய செய்தது.
இதனையடுத்து, பா.ஜ.க.வினரே ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறையை புறக்கணிக்கின்றனரா என்ற கேள்வி, தேசிய அளவில் தீயாய் பரவி வருகிறது. இதனால், கடும் விரக்தியில் இருக்கும் பா.ஜ.க, அவைக்கு வராத கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
Also Read
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!
-
திருவாரூரில் ரூ.846.47 கோடியில் 1,234 முடிவுற்ற பணிகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!