Politics
ஊழல் வழக்கு: பறிமுதல் செய்யப்பட்ட அஜித் பவார் சொத்துக்கள் விடுவிப்பு: அற்புதம் செய்த மோடி வாஷிங் மெஷின்!
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு நீடித்த நிலையில், தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவரான அஜித் பவார் மீது ரூ.25 ஆயிரம் கோடி மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அஜித் பவாரின் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால், சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் இந்த கூட்டணி ஆட்சியை பாஜக கவிழ்ந்து சிவசேனாவின் இருந்து வெளிவந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்ததில், அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் இருந்து அஜித் பவார் விடுவிக்கப்பட்டார். தற்போது மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த அஜித் பவாருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டதோடு, கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அஜித் பவாரின் சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை குறிப்பிட்டு பாஜக ஒரு வாஷிங் மெஷின் என்பது மீண்டும் நிரூபணமாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !