Politics
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
நாடாளுமன்ற அவைகள் கூடுவதும் உடனடியாக ஒத்திவைக்கப்படுவதும், ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய நடைமுறையாக மாறியுள்ளது.
பிரதமர் மோடிக்கு நெருங்கியவரான அதானி மீது கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் நாடாளுமன்றத்தில் எழும் போது அதனை புறக்கணித்து, நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைக்கும் பா.ஜ.க.வின் போக்கு, உழைக்கும் வகுப்பினர் மீதான சுரண்டல்களை ஊக்குவிக்கும் போக்காக அமைந்துள்ளது.
அவ்வகையில், இன்று (நவம்பர் 25) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய போதும், அதானியின் ஊழல் மீதான விவாதம் வேண்டும் என்றும், கேரளா மாநிலத்தின் வயநாடு நிலச்சரிவிற்கான நிவாரண நிலவரம் குறித்து விவாதம் வேண்டும் என்றும், மணிப்பூர் கலவரத்திற்கான தீர்வு எப்போது என்பது குறித்த விவாதம் தேவை என்றுமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், அது குறித்து பரிசீலிக்காமல் தனது வழக்கமான புறக்கணிப்பு நடவடிக்கைகளை தான் பா.ஜ.க கட்டவிழ்த்து விட்டுள்ளது.
அதன் விளைவாக, அதானி விவகாரம், வயநாடு நிலச்சரிவு, மணிப்பூர் கலவரம் என எது தொடர்பான விவாதமும் நடைபெறாமல் நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளையும் ஒத்திவைத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இது மக்களையும், மக்கள் நிகராளிகளையும் கடுமையான சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சிக்கல்களை புறக்கணிப்பதும், முறைகேடுகளை ஆதரிப்பதுமே பா.ஜ.க அரசின் சாதனைகளா? என்பதான கேள்விகளும் வலுக்கத்தொடங்கியுள்ளன.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!