Politics
நாட்டின் பன்முகத்தன்மையை உணர்ந்து செயல்படுங்கள் : நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி MP மின்னஞ்சல் !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை பாஜக முன்னெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது . அரசின் LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முகப்பு பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
அதிலும், மொழி மாற்றும் பிரிவில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே, ஆங்கிலத்தில் இணையதளத்தை பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தி பேசாத மக்கள் LIC இணையதளத்தை கையாள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், LIC நிறுவனம் உடனடியாக வலைதளத்தை மாற்றி அமைக்கவும், இதுபோன்ற சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் அறிவுறுத்த வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி கனிமொழி மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பிய மின்னஞ்சலில், " இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்(LIC ) வலைத்தளத்தின் இயல்புமொழியாக இந்தி மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து பயனாளர்கள் ஆங்கிலத்தை மொழியாக பயன்படுத்த மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தப் பலருக்கும் வலைத்தளம் தொடர்ந்து இந்தியிலேயே இயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் இந்தி பேசாத மக்கள் காப்பீடு குறித்து அறியவும், பயன்படுத்தவும் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டின் பன்முகத்தன்மையை உணர்ந்து, அரசு நிறுவனங்கள் தங்களின் தளங்களையும், சேவைகளையும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு மக்கள் பயன்படுத்தும் பல்வேறு மொழிகளிலும், பயனாளருக்கு உகந்த வகையில் அமைக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, வலைதளத்தின் மொழி மாற்ற செயலிகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். பயனாளர் உதவி அமைப்பை பல மொழிகளை பேசும் மக்களும் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். LIC நிறுவனம் உடனடியாக வலைதளத்தை மாற்றி அமைக்கவும், இதுபோன்ற சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !
-
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!