Politics
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு!: மணிப்பூரில் தொடரும் பா.ஜ.க.வின் அட்டூழியம்!
பா.ஜ.க ஆட்சி வகிக்கும் மணிப்பூர் மாநிலத்தில் ஒன்றரை ஆண்டுக்கு முன்னதாக தொடங்கிய கலவரம், இன்றளவும் இடையுறாமல் அரங்கேறி வருகிறது.
இதில், மெய்தி என்கிற பெரும்பான்மை இனத்தவர்களால், குகி - சூமி என்கிற சிறுபான்மை இனங்கள் வஞ்சிக்கப்படுவது ஒரு புறம் இருக்க, ஆட்சி வகிக்கும் பா.ஜ.க.வினரின் நகர்வுகளும், சிறுபான்மையினர்களை தாக்கும் வகையிலேயே தான் அமைந்துள்ளன.
அதற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த வன்முறையாளர்களால் சிறுபான்மையின பெண்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான போது, பா.ஜ.க அரசும் அதன் கீழ் செயல்படும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இருந்தும், வேடிக்கை பார்த்த நிலையே எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளன.
இந்நிலையில், தற்போது உரிமை குரல் கேட்டு போராடி வரும் மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அடக்குமுறையின் உச்சபச்ச செயல்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது மாநில பா.ஜ.க அரசு. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரழக்க நேரிட்டுள்ளது.
வன்முறையை வளர்த்து, வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க.விற்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுகின்ற போதும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் வீடுகள் முற்றுகையிடப்படும் போதும், பா.ஜ.க ஆட்சி மீது கடுமையான அதிருப்தி எழும் நிலையிலும், பா.ஜ.க அரசின் செயல்பாடுகளில் மட்டும் மாற்றம் நிகழாத சூழலே நிலவி வருகிறது.
இச்சூழலில், இது போன்ற பா.ஜ.க.வின் தோல்வி ஆட்சி மேலும் வெளிப்பட்டால், பா.ஜ.க ஆளும் மற்ற மாநிலங்களிலும் வாக்கு வங்கிகள் அடிவாங்கும் என்ற எண்ணத்தில், இணைய முடக்கம் மற்றும் ஊரடங்கு போன்ற அடக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
Also Read
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க 5 ஆண்டு திட்டம்! : முழு முனைப்பில் தமிழ்நாடு அரசு!