Politics
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : புதுச்சேரி பாஜக MP- க்கு தொடர்பு !
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஹவாலா பண இடைத்தரகர்கள் என கூறப்பட்ட சௌகார்பேட்டை பங்கஜ் என்கிற தீபக் லால்வாணி மற்றும் சூரஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நேற்று 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதில் இந்த விவகாரத்தில் தீபக் லால்வாணிக்கு தொடர்பு இல்லை என தெரியவந்த நிலையில், சூரஜ்-க்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு கோடி ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்து கொடுத்தேன் என முதலில் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், தங்கக் கட்டிகளை விற்று சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அதோடு புதுச்சேரி எம்பி செல்வகணபதி தன்னை தொடர்பு கொண்டு 20 கிலோ தங்க கட்டிகள் இருப்பதாகவும் அதை விற்றுத் தருமாறு கூறியதாகவும் சூரஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பேரில் 15 கிலோ தங்க கட்டிகளை சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளில் விற்றுக்கொடுத்ததாகவும், மீதி நகையை அவர்கள் புதுச்சேரியிலேயே விற்பனை செய்து விட்டதாகவும் சூரஜ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுக்காக தான் தங்க கட்டிகளை விற்றுக் கொடுத்தேன் என தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி தமிழக பாஜக நிர்வாகி கோவர்தனின் டிரைவர் விக்னேஷிடமும், சூரஜ் செல்போனில் அடிக்கடி பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சூரஜூடன் தொடர்பில் இருந்த மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Also Read
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?