Politics
"திராவிட இயக்கத்தை யாராலும் தொட்டுப் பார்க்கக் கூட முடியாது" - கழக அமைப்பு செயலாளர் RS பாரதி !
சென்னை தண்டையார்பேட்டையில் சென்னை வடக்கு மாவட்டம் ஆர் கே நகர் கிழக்கு பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் பகுதி செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் மீது மக்களுக்கு எந்த விதமான வெறுப்பும் இல்லை. மக்கள் பெண்கள் மத்தியில் தளபதி மு.க.ஸ்டாலின் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளார்
இந்தக் கட்சியை அழிப்பதற்கு பல பேர் முற்படுகிறார்கள். இந்த இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கழகத் தோழர்கள் ஒருங்கிணைந்து நின்றால் எவனும் தமிழ்நாட்டிற்குள் நுழையவே முடியாது
தமிழ்நாடு முழுவதும் செயல்பட முதலமைச்சருக்கு துணையாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துடிப்போன இளைஞராக செயல்படுவார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞருடைய வாரிசாக இயங்கி வருகிறார்
தொண்டர்கள் முகங்களை பார்த்தவுடன் புரிந்து கொள்கின்ற பக்குவம், தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொள்கின்ற பக்குவம், அரவணைத்து செய்கின்ற பக்குவம் என கலைஞரிடத்தில் என்னென்ன குணாதிசயங்கள் இருந்ததோ அனைத்தும் முழுமையாக பெற்றவராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். எனவே 50 ஆண்டு காலத்திற்கு இந்த இயக்கத்தை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.
Also Read
-
“சுயமரியாதைமிக்க மகளிர் பாசிஸ்ட்டுகளையும், அடிமைகளையும் வீழ்த்தப்போவது உறுதி!” : உதயநிதி திட்டவட்டம்!
-
“பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் சம்மட்டி அடி கொடுப்போம்!” : கனிமொழி எம்.பி சூளுரை!
-
“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?