Politics
மகாராஷ்டிராவில் விரைவில் வரும் தேர்தல் : பசு மாட்டை ராஜமாதாவாக அறிவித்த பாஜக கூட்டணி அரசு !
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது.
அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
பின்னர் சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்ததில், அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக கூட்டணியில் இணைந்தனர். இதனிடையே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றது பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக அமைந்தது.
மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதன் காரணமாக கடும் அச்சத்தில் உள்ள பாஜக கூட்டணி அரசு தற்போது அவசரமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் இந்துத்துவ வாதிகளை கவரும் வகையில், பசு மாட்டைத் ராஜமாதாவாக அறிவித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதிகாசக் காலங்களிலிருந்து பசு புனிதமாக கருதப்படுவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி அரசின் இந்த அறிவிப்பை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!