Politics
“தமிழ்நாட்டில் இயங்க தகுதியில்லாத இயக்கம் பா.ஜ.க!” : அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்!
சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சிவராஜின் 133-வது பிறந்த நாளையொட்டி சென்னை, தண்டையார்பேட்டை தங்கசாலை பகுதியில் அவரது உருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவராஜின் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி. கே. சேகர்பாபு, “முதலமைச்சரின் பணிகளுக்கு ஏற்கனவே தோள் கொடுத்து பணியாற்றியவர் உதயநிதி ஸ்டாலின்.
களத்தில் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு மக்கள் பணியாற்றியதன் வாயிலாக, கடந்த 7 ஆண்டுகளில் தி.மு.க.வின் முன்னேற்றத்திற்கும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் அரும்பாடுபட்டவர் உதயநிதி ஸ்டாலின்.
மக்களிம் நலன் எதுவென்பதை முழுமையாக அறிந்தவர் அவர். எனவே, முதலமைச்சரின் தலைமையில் அமைந்துள்ள தி.மு.க.வின் புதிய திட்டங்களை உருவாக்கி மக்கள் நலன் பெறும் வகையிலும், பணி சிறக்கும் வகையில் உதயநிதியின் செயல்பாடு இருக்கும் என தி.மு.க உறுப்பினர்களும் பொதுமக்களும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்
தமிழ்நாட்டில் இயங்க தகுதியில்லாத இயக்கம் பா.ஜ.க. அதனால்தான், மக்கள் பாஜகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை பரிசாக அளித்துள்ளனர். உதயநிதி அனைத்து தகுதியும் பொருந்தியவர் உதயநிதி ஸ்டாலின்.
அடுத்த கால் நூற்றாண்டுகாலம் தி.மு.க.வையும், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் தனது தோளில் சுமக்க உள்ளவர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டு மக்களிடம் செல்லாக்காசாகிவிட்ட பாஜகவின் கூற்றுக்கு செவிசாய்க்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
Also Read
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!
-
ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் - முதற்கட்ட பணியில் 1 லட்சம் தன்னார்வலர்கள்!
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !