Politics
“செந்தில் பாலாஜி வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் வேகமாக செயப்படுவார்” - இ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி !
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தில் அதன் பொது செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் அளிக்கப்பட்டது தொடர்பாக கலைஞர் செய்திகளுக்காக பேட்டி அளித்தார்.அப்போது பேசிய இ ஆர் ஈஸ்வரன் "செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் வரவேற்கத்தக்கது மகிழ்ச்சி என்றாலும், மிகவும் தாமதமாக கிடைத்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..
அமலாக்க துறையை பயமுறுத்தும் ஆயுதமாக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஜாமீன் வழங்காமல் விசாரணை கைதியாக சிறையில் வைக்கலாம் என்பதே அமலாக்க துறையின் திட்டம். ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஜாமீன் கிடைக்கப்பெற்று வருகிறது.
வழக்கு விசாரணையில் குற்றவாளியா இல்லையா என்பதற்கு முன்பாகவே கிடைக்கப்பட்ட தண்டனை தான் செந்தில் பாலாஜிக்கு கிடைத்தது. இதன் முக்கிய நோக்கம் சிறப்பாக செயல்பட்டு வரும் மனிதர்களை சிறையில் வைத்து மன உறுதியை சோதிக்கும் விதமாக அவர்கள் பாதையை திசை மாற்றுவதற்கான செயலை தான் ஒன்றிய அரசு செயல்படுத்தியது..
செந்தில் பாலாஜி திறமையாக செயல்படக்கூடியவர் மன உறுதி கொண்டவர். தற்போது பல்வேறு போராட்டத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜி வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் பலமடங்கு வேகமாக செயப்படுவார்” என்று கூறினார்.
Also Read
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!