Politics
பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி MLA: கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு!
பாஜக ஆளாத மாநிலங்களை தவிர, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாஜக குறிவைத்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதாவது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளை ஏவி, எதிர்க்கட்சிகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரித்து வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை பாஜக குறிவைத்தது. டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிதரும் பணத்தை வைத்து தங்கள் கட்சியில் இணைக்கும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி மீதும் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தால் அவர்களுக்கு பல கோடிகளை தருவதாக பாஜக பேரம் பேசியதாக டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா பகிரங்கமாக விமர்சித்திருந்தார். அதனை உண்மை என்று நிரூபிப்பது போல ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வார் என்பவர் பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வாரை கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் அறிவித்துள்ளார். ஜூலை 10, 2024ம் தேதி முதல் அவரது சட்டசபை உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதாக சபாநாயகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!