Politics
பா.ஜ.க ஆட்சியின் 100 நாள் சாதனைகள் இதுதான் : பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய சுப்ரியா ஸ்ரீநேட்!
18 ஆவது மக்களை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடிப்போம் என பா.ஜ.க கூறியது. ஆனால் பா.ஜ.கவின் கனவை இந்தியா கூட்டணி தவிடுபொடியாக்கியது.
பா.ஜ.கவால் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனால் ஆட்சியை பிடிக்க முடியாத நிலையில், நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் உதவியால் மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததுள்ளது.
அதேபோல், பிரதமர் பட்டியலில் அமித்ஷா, யோகி பெயர்கள் அடிபட்டாலும் தனது செல்வாக்கை பயன்படுத்தி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று இருக்கிறார் மோடி.
இந்நிலையில் பா.ஜ.கூட்டணி தலைமையிலான ஒன்றிய ஆட்சி அமைந்து 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த 100 நாட்களில் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றால் கடந்த 10 ஆண்டுகளில் என்ன நிலை இருந்ததோ அதே நிலைதான் தொடர்கிறது.
பா.ஜ.க அரசின் 100 நாள் சாதனைகளை காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேட் பட்டியலிட்டு வெளுத்து வாங்கி இருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய அவர், ”பா.ஜ.க ஆட்சியின் 100 நாளில் 38 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. இதில் 21 பேர் உயிரிழப்பு.
விமான நிலையம், சத்ரபதி சிவாஜி சிலை என 56 கட்டுமானங்கள் இடிந்து விழுந்துள்ளது.ஜம்மு காஷ்மீரில் கடந்த 100 நாட்களில் 26 தீவிரவாத தாக்குதல்கள் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
100 நாட்களில் பெண்களுக்கு எதிராக 104 கொடூரமான குற்றங்கள் நடந்துள்ளது.157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட்,யுஜி நெட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதானிக்காக செபி தலைவர் தனது பதவி மற்றும் செல்வாக்கை தவறாக பயன்படுத்தியது”. என பட்டியலிட்டுள்ளார்.
மேலும்,” பா.ஜ.கவின் 5 ஆண்டு தொலை நோக்கு திட்டம் என்ன?,அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, செபி மற்றும் அதானி பற்றி எப்போது பேசுவீர்கள்?, ஊழல், பெண்கள் பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றி எப்போது பேசுவீர்கள்? என சுப்ரியா ஸ்ரீநேட் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!