Politics
”எங்கள் மக்களை புறக்கணித்துவிட்ட ஒன்றிய பா.ஜ.க அரசு” : மணிப்பூர் MP பிமல் அகோய்ஜாம் குற்றச்சாட்டு!
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட முன்னதாக முன்னாள் முதலமைச்சர் மறைந்த மைரெம்பாம் கொய்ரெங் சிங் வீட்டின் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இதில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்ந்தனர்.
அதேபோல் ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறையாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீண்டும் மணிப்பூரில் வன்முறை அதிகரித்துள்ளது.
மேலும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மாநில பா.ஜ.க அரசை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டத்தை ஒடுக்கப்பார்கிறார்கள். இருந்து மாணவர்கள் போராடி வருகிறார்கள். பிரதமர் மோடியின் பேனர்களை கிழித்து தங்களது எதிர்ப்புகளை மாநில அரசுக்கு எதிராக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில் மணிப்பூர் மக்களை ஒன்றிய பா.ஜ.க அரசு புறக்கணித்துவிட்டது என அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் அகோய்ஜாம் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பேட்டி கொடுத்துள்ள பிமல் அகோய்ஜாம், ”மணிப்பூரில் 16 மாதங்களாக வன்முறை நீடிக்கிறது. எங்களை ஒன்றிய அரசு முழுமையாக புறக்கணித்துவிட்டது. 33 லட்சம் மக்கள் உள்ள மாநிலத்தில் 66 ஆயிரம் ஒன்றியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ராணுவத்தை திரும்ப பெறுங்கள், எங்கள் பாதுகாப்பை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!