Politics
"இனி MLA-க்கள் கட்சி தாவினால் ஓய்வூதியம் வழங்கப்படாது" -ஹிமாச்சல் பிரதேச சட்டமன்றத்தின் நிறைவேறிய மசோதா !
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிதரும் பணத்தை வைத்து தங்கள் கட்சியில் இணைக்கும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் பிற கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ,க்களை வாங்கி அதன் மூலம் ஆட்சியை கவிழ்ப்பது, பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற செயல்களில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இது போல ஒரு கட்சியில் இருந்து மக்கள் பிரதிநியாக இருந்து, வேறு கட்சியில் சேர்வதை தடுக்க கட்சித் தாவல் சட்டம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு அமலில் இருக்கிறது. இந்த நிலையில், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் எம்.எல்.ஏக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது என்ற புதிய சட்டத்திருத்த மசோதா ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆறு ஹிமாச்சல் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்காமல் விலகியதன் காரணமாக கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இது மாநிலத்தில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது போன்ற சூழல்கள் வராமல் தடுக்கும் வகையில், இந்த சட்டத்தினை ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அரசியலமைப்பு மீறல்களைத் தடுக்க, மக்களின் ஆணையைப் பாதுகாக்க, மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்காக இது அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!