Politics
"மோடி அடுத்த ஆண்டு ராஜினாமா செய்யாவிட்டால், தனது நாற்காலியை இழப்பார்" - பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்தது. எனினும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கொடுத்த ஆதரவு காரணமாக தற்போது பாஜக அரசு மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.
ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு சர்ச்சையில் சிக்கிவருகிறது. அதிலும் இந்த முறை பாஜக சார்பில் பிரதமராக மோடிக்கு பாஜகவில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. பாஜகவில் 5 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்சி பதவியில் அல்லது முக்கிய பதவி அளவில் இருக்க கூடாது என்ற மறைமுக விதி உள்ளது.
இதனை காரணமாக வைத்தே பாஜகவில் இருந்து முக்கிய தலைவர்கள் மோடியால் பதவி இழக்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் அடுத்த ஆண்டு மோடிக்கு 75 வயது ஆகவுள்ள நிலையில், அவரும் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், மோடி தனது 75வது பிறந்த நாளில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், பிரதமர் மோடி 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அன்று தனது 75வது பிறந்த நா"ளை எட்டவுள்ளார்.
இதனால் பாஜகவின் விதிப்படி அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால் வேறு வழிகளில் அவர் தனது பிரதமர் நாற்காலியை இழக்கக்கூடும்"என மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!