Politics
10 ஆண்டுக்கு பின் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் : ஒரே அணியாக தேர்தலை சந்திக்கும் இந்தியா கூட்டணி !
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கு நடந்த ஆட்சியை பாஜக கவிழ்த்த நிலையில், ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. இதனை சாதகமாக வைத்து காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் தனியே பிரிக்கப்பட்டது.
அதோடு ஜம்மு காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டமும் பறிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறாத நிலை நிலவி வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அங்கு அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி ஜம்மு காஷ்மீரிலுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் செப்.18, 25 மற்றும் அக்.1-ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை இந்தியா கூட்டணி ஒரே அணியாக எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, "மாநில அந்தஸ்து என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அது எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் துயரமான நாட்களை இந்த மாநிலம் பார்த்துள்ளது. முழு அதிகாரத்துடன் அது சரிசெய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக நாங்கள் இந்தியா கூட்டணியுடன் இணைந்து நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!